
தமிழக கல்லூரி மாணவிகளுக்கு இன்று காலை அவர்களது வங்கி கணக்கில் 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மகளிர் உரிமைத் தொகை மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழகத்தில் கடந்த 10ஆம் தேதி புதிய அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றக் கூட்டப்பட்டது. இதற்கிடையில் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக அரசுக்கு அழுத்தம் ஏற்பட்டது. கடந்த திமுக அரசில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டங்கள் பலவற்றை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழகத்தின் நிதிநிலை – தவெக அரசின் வெள்ளை அறிக்கை
மேலும் தவெக தரப்பில் முன்வைக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளும் காத்திருக்கின்றன. இதைப் பொறுத்தவரை முதலில் நிதி நிலைமையை ஆய்வு செய்ய வேண்டும். அதன்பிறகு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். தொடர்ச்சியாக பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள், நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை கருத்தில் எடுத்து கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


