Homeதமிழகம்"கைமாறிய 'நமது அம்மா'.. அதிமுகவில் நள்ளிரவு அதிரடி.. இபிஎஸ்க்கு விழுந்த பலத்த அடி.. பின்னணியில் யார்

“கைமாறிய ‘நமது அம்மா’.. அதிமுகவில் நள்ளிரவு அதிரடி.. இபிஎஸ்க்கு விழுந்த பலத்த அடி.. பின்னணியில் யார்

சென்னை: அதிமுகவில் நீடித்து வரும் உள்கட்சி விவகாரங்கள் இப்போது மேலும் தீவிரமடைந்துள்ளன.. கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகங்களான நமது அம்மா நாளிதழ் மற்றும் நியூஸ் ஜே தொலைக்காட்சி ஆகியவை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செய்திகளை வெளியிட தொடங்கியிருப்பது கட்சிக்குள் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.. தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவைத் தொடர்ந்து, இபிஎஸ் தரப்பில் 22 எம்எல்ஏக்களும், வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பில் 25 எம்எல்ஏக்களும் இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன..

அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது அம்மா நாளிதழின் ஆசிரியராக கல்யாணசுந்தரம் இருந்து வருகிறார்.. இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வரை இபிஎஸ் ஆதரவு செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தார்..

நமது அம்மா நாளிதழ் ஆனால் வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்புடனான மோதல் அதிகரித்துள்ள நிலையில், இன்று வெளியான நாளிதழில் செய்திகள் முற்றிலும் மாறியுள்ளன.. இன்று காலையில் நாளிதழைப் பார்த்த அதிமுக நிர்வாகிகள் பலரும் செய்திகளின் போக்கைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.. காரணம், நாளிதழ் முழுவதும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான விமர்சன செய்திகளே நிரம்பியுள்ளன.. இந்த மாற்றங்களுக்கு பிறகு, வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பின் தலையீடு இருப்பதாகத் தெரிகிறது.. நாளிதழின் நிர்வாகத்தை அவர்கள் கையிலெடுத்த காரணத்தால், எடப்பாடி குறித்த செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி இதில் ஹைலைட் என்னவென்றால், எடப்பாடிக்கு எதிராக செய்திகள் வந்தாலும் நாளிதழின் முகப்புப் பக்கத்தில் நிறுவனர் என்ற இடத்தில் இன்னமும் எடப்பாடி கே பழனிசாமி என்ற பெயரே நீடிக்கிறது.. செய்திகளில் தெரிந்த மாற்றம் நிர்வாக ரீதியான பதிவுகளில் இன்னும் முழுமையாக மாறவில்லை என்பதையே இது காட்டுகிறது..

நாளிதழை போலவே நியூஸ் ஜெ தொலைக்காட்சியும் இப்போது இபிஎஸ்க்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.. இன்று காலை முதல் இந்த சேனலில் வெளியாகும் செய்திகள் மற்றும் விவாதங்கள் அனைத்தும் வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பிற்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமியின் தலைமையை விமர்சிப்பதாகவும் அமைந்துள்ளன.. கட்சியின் சொந்த ஊடகங்களே தலைமைக்கு எதிராக மாறியிருப்பது இபிஎஸ் தரப்புக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.. நியூஸ் ஜெ டிவி கட்சியின் பொதுச்செயலாளருக்கு எதிராகவே அதிகாரப்பூர்வ நாளிதழில் செய்திகள் வெளியாக தொடங்கியிருப்பது அதிமுக வட்டாரங்களிலேயே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.. இதற்கு எடப்பாடி தரப்பு என்ன பதிலடி கொடுக்கப் போகிறது என்ற கேள்வி தற்போது தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.. அதிமுகவின் இந்த உள்கட்சி மோதல் தற்போது கட்சியின் ஊடகங்களிலும் வெளிப்படையாக தெரிகிறது.. எம்எல்ஏக்களின் ஆதரவு வேலுமணி தரப்புக்கு அதிகமாக இருப்பதாக கூறப்படும் நிலையில், அதன் தாக்கம் நாளிதழ் மற்றும் டிவி செய்திகளிலும் பிரதிபலிக்க தொடங்கியுள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகங்களே இபிஎஸ் தலைமையை விமர்சிக்கும் சூழல் உருவாகியிருப்பது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.. ஒரு கட்சிப் பத்திரிகையே அதன் பொதுச்செயலாளருக்கு எதிராகச் செய்தி வெளியிடுவது தமிழக அரசியலில் இப்போது முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.. இதற்கு இபிஎஸ் தரப்பு எப்படிப் பதிலளிக்கப் போகிறது என்பதிலேயே தற்போது கவனம் திரும்பியுள்ளது.. இன்னும் என்னென்ன நடக்க போகுதோ? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments