Homeதமிழகம்கண்ணீர் விடும் மாணவர்கள், ஜூன் 21 இல் நீட் மறுத்தேர்வு!

கண்ணீர் விடும் மாணவர்கள், ஜூன் 21 இல் நீட் மறுத்தேர்வு!

டெல்லி: நாடு முழுவதும் ஜூன் 21 ஆம் தேதி நீட் மறுத்தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வு ரத்து மாணவர்களுக்கு மன உளைச்சலை கொடுத்துள்ளதால் பிளஸ் 2 தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்புக்கு மாணவர்களை தேர்வு செய்யும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என பலர் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த நிலையில் மறுத்தேர்வுக்கான தேதி

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நீட் எனும் நுழைவு தேர்வு மூலம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடத்துவதும், நீட் தேர்வு என்ற பெயரில் மாணவர்கள், மாணவிகளை சோதனை என்ற பெயரில் மனஉளைச்சலுக்குள்ளாக்குவதும் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டும் மே 3 ஆம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்த தேர்வை நாடு முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்த தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதாவது ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் லீக்கானதாக எழுந்த புகாரின் பேரில் மே 3 ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments