Homeதமிழகம்தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. யாருக்கு என்ன பொறுப்பு? இதோ லிஸ்ட்!

தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. யாருக்கு என்ன பொறுப்பு? இதோ லிஸ்ட்!

அரசு அதிகாரிகள் இடமாற்றம் என்பது நிர்வாக ரீதியாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் புதிதாக ஒரு அரசு பொறுப்பேற்றுக் கொண்டால் தங்கள் வசதிக்கேற்ப நம்பிக்கைக்குரிய அதிகாரிகளை வேண்டிய துறைக்கு நியமித்து கொள்வது வழக்கம். அதன்படி, தமிழ்நாட்டின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், திமுக, அதிமுக கட்சிகளின் ஆட்சியில் பணியாற்றாத அதிகாரிகளாக அலசி ஆராய்ந்து நியமித்து வருகிறார்.

அந்த வகையில், ஐஏஸ் அதிகாரிகள் பலரும் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது,

  • தொழில், முதலீட்டுத்துறை செயலாளராக விஜயகுமார் நியமனம்
  • உயர்கல்வித்துறை செயலாளராக அருண் ராய் நியமனம்
  • ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலாளராக சுப்பையன் நியமனம்
  • டெல்லி தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையராக ஜெயா நியமனம்
  • சுற்றுலாத்துறை ஆணையராக சண்முகம் நியமனம்
  • மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, தகவல்துறை செயலாளராக அருண் தம்புராஜ் நியமனம்
  • சேலம் ஆட்சியராக இளம்பகவத் நியமனம்
  • கலை மற்றும் கலாச்சாரத்துறை இயக்குநராக பிரிந்தாதேவி நியமனம்
  • தமிழ்நாடு குடிமைப்பொருள் விநியோகக் கழக தலைவராக உமாநாத் நியமனம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments