
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்துக்குட்பட்ட கடப்பாக்கம் ஊராட்சியில் மே 1 நடத்தப்பட்ட கிராம சபை கூட்டம் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நிராகரித்தனர். திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறார்.கிராம சபை கூட்டத்தில் மக்கள் நிறைவேற்றும் தீர்மானங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.

பதவிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்னும் மக்களின் அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை. குடிநீர் சாலை வசதிக்கு அரசு நிதி ஒதுக்கினால் அதை அரசியல் அதிகாரத்தை வைத்து தங்கள் சொந்த செலவிற்கு எடுத்து கொள்கிறார்கள். இவர்களுக்கு அரசு அதிகாரிகளும் துனைபோகிரர்கள்.

கிராம ஊராட்சிகள் சட்டம் 1994- இல் சொல்லப்பட்ட பிரிவு 205, பிரிவு 203 , அனைத்தையும் மீரியிருக்கிரார்.பிரிவு 131, பிரிவு 110, சொல்லப்பட்ட அடிப்படை கடமைகள் கூட முறையாக செய்துதரவில்லை. எனவே வேறொரு தேதியில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் முறையாக பொதுமக்களுக்கு அறிவிப்பு கொடுத்து கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்றும் மக்களிடம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று மிக தாழ்மையுடன் பொது மக்களால் கேட்டுக் கொள்ளபடுகிறது.
பகுஜன் குரல் செய்திக்காக திருவள்ளூர் மாவட்ட நிருபர் சுப்ரமணி.