2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகளைத்(₹2000) திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.1,000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு இந்த 2,000 ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐ வெளியிட்டது. இந்நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளை நாட்டின் பணப்புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது.
வரும் 23ம் தேதி முதல், பொதுமக்கள் தங்கள் கைவசமுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30, 2023 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் அல்லது வங்கிக் கிளைகளில் ஒப்படைத்து, அவரவருக்குரிய வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் அல்லது வேறு பணத் தாள்களாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஆர்பிஐ தெரிவித்துளளது. ஒருவர் ஒருமுறை 20,000 ரூபாய் மதிப்புள்ள 2,000 நோட்டுகளை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.