பிரதமர் மோடியுடன் மு.க.ஸ்டாலின் 20 நிமிடங்கள் சந்திப்பு… இபிஎஸ்., ஓபிஎஸ் சந்திப்பு ரத்து… நடந்தது என்ன?

தமிழக நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு இன்று மாலை மைசூர் திரும்பிய பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் விமான நிலையத்தில் சந்தித்து பேசினார். சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்தித்து, தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கை மனுவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்தார்.

தமிழக நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு இன்று மாலை மைசூர் திரும்பிய பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் விமான நிலையத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் வரை தொடர்ந்தாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமரிடம் அளித்தார்.

பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த மனுவில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள் பின்வருமாறு:-

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு பங்களிப்பை வழங்கவேண்டும்.

தமிழ்நாட்டில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டுகள், நிகழ்வுகளை நடத்த வேண்டும்.

விமானநிலைய விரிவாக்கத்திற்கான பாதுகாப்புத்துறை நிலங்களை இலவசமாக வழங்க வேண்டும்.

ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

காலணி உற்பத்திக்கான புதிய உற்பத்தி சார்ந்த ஊக்கச்சலுகை திட்டம் வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சாதிப்பட்டியலில் “ன்” மற்றும் “க” என முடிவடையும் பெயர்களை “ர்” விகுதியுடன் மாற்ற வேண்டும்.

பிஎம் மித்ரா பூங்காவின் முதன்மை மேம்பாட்டாளராக சிப்காட்டை நியமிக்க வேண்டும்.

கடலோர காற்றாலை மின்னுற்பத்தியின் பெரும்பங்கை தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டும்.

ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும்.

சென்னையில் விளையாட்டு ஆணையத்தின் மண்டல மையத்தை அமைக்க வேண்டும்.

சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் உள்ள முரண்பாடுகளை களைய நடவடிக்கை தேவை.

ஈழத் தமிழர்களுக்கு சம குடியுரிமை, அரசியல் உரிமைகள் வழங்க இலங்கை அரசை வலியுறுத்தவேண்டும்.

பாக். வளைகுடாவில் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அந்த மனுவில் இடம்பெற்றுள்ளன.

இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமரை சந்திக்க இருந்த நிலையில், சந்திப்பு ரத்தானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் தனித்தனியே சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில், சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *