தமிழக கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
நாளை கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
வருகிற 1-ந் தேதி கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மற்ற கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
2-ந்தேதி கடலோர மாவட்டங்களிலும், 3-ந்தேதி தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
இன்று முதல் 3-ந் தேதி வரை குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.