
தமிழக அரசானது, போக்குவரத்து சேவையை ஊக்கப்படுத்தும் வகையிலும், கூட்ட நெரிசலை குறைப்பதற்காகவும், பேருந்து, ரயில், மெட்ரோ உள்ளிட்டவற்றில், பல்வேறு சலுகைகளை அறிவித்திருந்தது. இதில், குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டு முதல், விரைவு பேருந்தில், வார நாட்களில் பயணம் செய்வோருக்கு 10% முதல் 20% வரை கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுகளில், சலுகையின்றி கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை, ‘லின் கட்டண முறை’ என்று கூறுவர். இந்நிலையில், அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த கட்டணச் சலுகைகள் எதுவும் ஜூன் 15ம் தேதி வரை செல்லுபடியாகாது என அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC) அறிவித்துள்ளது. அதாவது, பள்ளி, கல்லூரிகள் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

எனவே தான் விடுமுறை நாட்கள் என்பதால், மக்கள் அதிக அளவில் பேருந்து சேவையை உபயோகப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதனால், இந்த கோடை விடுமுறையை பயன்படுத்தி, வருவாய் ஈட்ட விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. ஜூன் 15ம் தேதி வரை, விரைவு போக்குவரத்தில் பயணம் செய்வோருக்கு, ஒவ்வொரு டிக்கெட்டும் குறைந்தது ரூ. 50 முதல் ரூ. 150 வரை கூடுதலாக இருக்க கூடும்.