

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த வேலூர் அரசு மாதிரி பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவர்களை கடந்த 05ம் தேதி சனிக்கிழமை தகாத வார்த்தையில் திட்டி அடித்து உதைத்து சித்திரவதை செய்தாக ஆசிரியர் ராஜா மற்றும் தலைமை ஆசிரியர் மீது பள்ளி மாணவர்கள் குற்றச்சாட்டு இதனை அறிந்து பகுஜன் குரல் மாவட்ட செய்தியாளர் சிவபெருமான் அவர்கள் மாணவர்களை நேரில் சந்தித்து உண்மையை விசாரித்தார். அப்பொழுது பள்ளி மாணவர்களை தாக்கிய ஆசிரியர் அதே கிராமத்தில் உள்ள முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களை வைத்து பஞ்சாயத்து பேசியதாகவும் இந்தச் செய்தியை வேறு யாரிடமாவது கூறினால் உங்கள் செய்முறை தேர்வில் தோல்வி அடைய வைத்து உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடுவேன் என மிரட்டியதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் பள்ளியில் அடிப்படை வசதி இன்றி இருப்பதாகவும் இதுவரை கழிவறை கூட செயல்படுவதில்லை என்றும் மாணவர்கள் குற்றம்சாட்டினர் அதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஜீவன்ராஜ் விசிக பார்த்திபன் தொகுதி தலைவர் பொன்னுரங்கம்,மகேந்திரன்,கோபிகிருஷ்ணன். ஆகியோர்கள் உளுந்தூர்பேட்டை மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் ராஜா மீது நிரந்தர பணி நீக்கம் மற்றும் தலைமை ஆசிரியர் கோவர்தனன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.