பிரிட்டனின் எலிசபெத் அரசியார் அரியணை ஏறி 70 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளன.அந்த மைல்கல்லை, தனிச்சிறப்புமிக்கச் சாதனை என்று தமது அம்மாவுக்கு இளவரசர் சார்ல்ஸ் புகழாரம் சூட்டினார்.இளவரசர் சார்ல்ஸ் அரியணை ஏறும்போது அவரது மனைவி கமிலா ‘அரசி துணைவி’ என்று அழைக்கப்பட வேண்டும் என்று எலிசபெத் அரசியார் முன்னதாக விருப்பம் தெரிவித்திருந்தார்.அதற்கு நன்றிகூறினார் இளவரசர் சார்ல்ஸ்.அப்பெருமையை தாமும் தமது மனைவியும் ‘ஆழமாக உணர்வதாக’ அவர் கூறினார்.இங்கிலாந்து அரியணையில் ஒருவர் 70 ஆண்டுகள் நீடித்திருப்பதுஇதுவே முதன்முறையாகும்.இந்நாளைக் குறிக்க இன்று பிரிட்டிஷ் அரசியார் அதிகாரபூர்வ நிகழ்ச்சி எதிலும் கலந்துகொள்ளவில்லை.பிரிட்டிஷ் அரசியார், காலஞ்சென்ற அவரது கணவர் பிரின்ஸ் ஃபிலிப் இல்லாமல் கழிக்கும் முதல் ஆண்டுநிறைவு இது.தமது தந்தை ஆறாவது ஜார்ஜ் அரசர் 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி உயிர் இழந்ததை அடுத்து, எலிசபெத் பிரிட்டிஷ் அரசியாகப் பதவி ஏற்றார்.அந்த நாளை தாம் அரியணை நாளாக மட்டுமல்ல, தமது தந்தை மரணத்துக்காக நினைவுகூர்வதாக எலிசபெத் அரசியார் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 6) வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.நாட்டுமக்கள் காட்டும் விசுவாசத்துக்கும் அன்புக்கும் தாம் அவர் நன்றி தெரிவித்தார்.