
நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி பிப்ரவரி 17ஆம் தேதி காலை 10 மணி முதல் 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 12,838 பிரதிநிதிகளுக்கான தோ்தல் பிப்ரவரி 19- ஆம் தேதி நடைபெறவுள்ளது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன