மோடியின் அதிரடி.. ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. இனி கை வைக்கவே முடியாது..

டெல்லி: ரேஷன் அட்டைகள் தொடர்பாக மத்திய அரசு முக்கியமான தகவல் ஒன்று வெளியிட்டு உள்ளது. ‘தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுக்க ரேஷனில் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மக்களின் வசதிகளை மனதில் வைத்து ரேஷன் பொருட்கள் வாங்குவதை எளிதாக்கும் விதமாக வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன.

முக்கியமாக ரேஷன் துறை முடிந்த அளவு டிஜிட்டல் மயமாக மாற்றப்பட்டு வருகிறது. உதாரணமாக எஸ். எம். எஸ் மூலமாக பில் அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.அதாவது ரேஷன் பொருட்களை வாங்கியவர்களுக்கு எஸ். எம். எஸ் மூலமாக அவர்கள் இணைத்து இருக்கும் போன் எண்ணுக்கு என்னென்ன பொருட்கள் வாங்கப்பட்டது என்று உறுதி செய்வதற்காக பில் அனுப்பப்படும். ரேஷன் பொருட்கள் திருடு போவதை தடுக்க இப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உதாரணமாக நீங்கள் ரேஷனில் போய் சர்க்கரை வாங்குகிறீர்கள். மற்ற பொருட்கள் எதுவும் வாங்கவில்லை.

இதையடுத்து நீங்கள் சர்க்கரை வாங்கியதற்கான பில் உங்களுக்கு வரும். போனில் நீங்கள் எவ்வளவு சர்க்கரை வாங்கினீர்கள் என்ற விவரம் இருக்கும். நீங்கள் வாங்காத பொருட்கள் அதில் இருந்தால் நீங்கள் புகார் கொடுக்க முடியும்.இந்த நிலையில் ரேஷன் கடைகளுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகளை சரியான அளவில் கொடுக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கிடைக்கும் உணவு தானியங்கள் சரியாக கிடைக்கிறதா என்பதை மின்னணு பாயின்ட் ஆப் சேல் சாதனங்கள் மூலம் உறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மின்னணு பாயின்ட் ஆப் சேல் சாதனங்கள் இதில் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரேஷன் பொருட்கள் முறையாக மின்னணு பாயின்ட் ஆப் சேல் சாதனங்கள் மூலம் எடை போட்டு மட்டுமே விற்க வேண்டும். இதை ஆன்லைனில் அப்டேட் செய்ய வேண்டும். அப்போது மத்திய அதிகாரிகளுக்கு பொருட்கள் குளறுபடி இல்லாமல் சரியாக செல்கிறதா என்பது தெரிய வரும். ரேஷன் பொருட்களின் அளவு குறைவாக இருக்கும். ரேஷன் பொருட்கள் திருடப்படும் பிரச்னையை தவிர்ப்பதற்காக இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டு உள்ளது.

இப்படி ரேஷன் பணிகள் பலவும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் ரேஷன் அட்டைகள் தொடர்பாக மத்திய அரசு முக்கியமான தகவல் ஒன்று வெளியிட்டு உள்ளது. அதன்படி ரேஷன் அட்டைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி இந்தியாவில் ரேஷன் கார்டுகள் 100% டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அதாவது எல்லா ரேஷன் அட்டைகளும் டிஜிட்டல் அட்டைகளாக மாற்றப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. நாட்டில் 19 கோடியே 72 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ளன.

இவை எல்லாம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டதாக மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். 99% ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 1 சதவிகிதமும் விரைவில் இணைக்கப்படும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரேஷன் பொருட்கள் திருடப்படுவதை தவிர்க்க இந்த நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *