
பாபாசாஹிப் டாக்டர் *B.R.அம்பேத்கர்* அவர்களின் பிறந்த தின விழாவை முன்னிட்டு வருகின்ற *05/04/2023* அன்று மாலை *4* மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம், *போளூர்*, சனிக்கவாடி, அம்பேத்கர் நகரில் மக்கள் புரட்சி கழகம் கட்சி நிறுவனர்-தலைவர் அண்ணன் *மா.ப.வர்கீஸ்* BA LLB அவர்களின் தலைமையில் தென்னிந்திய புத்த விஹார் உபாசகர்கள் அண்ணன் *பெளத்தஜெயபால்*, அண்ணன் *வினாயகம்* அவர்களின் முன்னிலையில் வணக்கத்துக்குரிய பிக்கு *புத்தபிரகாஷ்* அவர்கள், பிக்கு *பதண்டநாகராஜ்* அவர்கள் மற்றும் வணக்கத்துக்குரிய பிக்குனிகள் *தீபம்மாள்சுந்தரி, அமராவதி, தமிழ்கோவை,* அவர்கள் *நூறு(100)* பேருக்கு தீட்சை வழங்குகிறார்கள்.

இதில் பெளத்த சங்கங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் பொறுப்பாளர்கள், சமூக சிந்தனையாளர்கள், மக்கள் புரட்சி கழகம் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெளத்த உபாசகர்கள் அனைவரும் சேர்ந்து நடத்தி வைக்கிறார்கள்