Bahujan kural News January,31
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த நன்னாரம் கிராமத்தில் பல ஆண்டுகளாக மாற்று சமூகத்தினர் அனுபவித்து வருவதால் அதனை மீட்டு வீடு கட்ட மனை பட்டா இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் மேலும் அதே கிராமத்தில் உள்ள பல ஏக்கர் பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்து அகற்றி ஆதிதிராவிடர் பழங்குடி மக்களிடம் வழங்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜீவன்ராஜ். தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் கருப்பையா மாநில மகளிர் அணி செயலாளர் தலித்.நதியா மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் உளுந்தூர்பேட்டை தொகுதி தலைவர் பொன்னுரங்கம் ஆகியோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் இதனை பெற்றுக் கொண்ட ஆட்சியர் அவர்கள் உடனடி விசாரணை செய்து வரும் சனிக்கிழமை 05/02/2022 அன்று பதில் அளிப்பதாக உறுதி அளித்தார்.
பகுஜன் குரல் செய்திக்காக மாவட்ட செய்தியாளர் ப.சிவபெருமான்
