திடீர் நில நடுக்கம்.. பொதுமக்கள் அதிர்ச்சி!!

சற்றுமுன்: நாமக்கல்லில் திடீர் நில நடுக்கம்.. பொதுமக்கள் அதிர்ச்சி!!

சேலம் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காலை நேரத்தில் 3.3  என்ற ரிக்டர் அளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் எந்தவித அசம்பாவிதமும் பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த ரோகினி அவர்கள் மக்கள் இவ்வாறான சூழலில் பதற்றம் இல்லாமல் அதனை எப்படி சமாளிப்பது என்பது குறித்து அறிவுறுத்தினார்.

பொதுவாகவே நில நடக்கும் ஏற்படும் பொழுது சாலைகளிலோ அல்லது வீடுகளில் உள்ள கண்ணாடி கதவுகள் போன்றவற்றின் அருகிலோ நிற்பதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை பாதுகாப்பான இடத்திற்கு சென்று தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் நாமக்கல்லில் இன்று மதிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது நிலநடுக்கமா அல்லது சூப்பர் சோனிக் விமானத்தின் சத்தத்தினால் இந்த அதிர்வு ஏற்பட்டிருக்குமோ என அதிகாரிகள் சந்தேகிகின்றனர்.எனவே இது குறித்து கண்டறிய ஆய்வு செய்து வருகின்றனர். தற்பொழுது வரை இதன் நிலநடுக்கம் என்பதை உறுதி செய்யும் வகையில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.

Flash News: 7299977775

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *