CM MKStalin | இந்திய தூதரகத்தின் உதவியுடன் உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
துபாயில் அல் ராஸ் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4வது தளத்தில் சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த இமாம் காசிம், முகமது ரபீக், கேரளாவை சேர்ந்த தம்பதி உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், துபாயில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.