
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுக்கா அய்யலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கருவார்பட்டியில் தார் சாலை அமைக்க ரோடுகளை பறித்த அரசாங்கம் சுமார் பதினைந்து நாட்கள் ஆகியும் தார் சாலை சரி செய்யாத காரணத்தினால் பொதுமக்களும் பள்ளி குழந்தைகளும் மருத்துவமனைக்கு மற்றும் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கு சிரமப்படுகின்றனர் மற்றும் வாகனங்கள் சென்றுவர விபத்துக்குள்ளாகின்றது.

எனவே விரைவில் தார் சாலை அமைத்துத் தர வேண்டி அரசாங்கத்திடம் கருவார்பட்டி ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பகுஜன் குரல் செய்திக்காக திண்டுக்கல் மாவட்ட நிருபர் R.கார்த்தி.