
கோவை மாவட்டம் பேரூர் பகுதியை சேர்ந்த ராஜன் மகன் சுரேஷ்ராஜன்(60) என்பவர் பகுதி நேர வேலைக்காக ஆன்லைன் மூலம் பார்த்த போது தனக்கு அறிமுகம் இல்லாத நபர் ஒருவரை அவர் கொடுத்த வாட்ஸ் அப் எண் மூலம் தொடர்பு கொண்டு, அறிமுகம் இல்லாத நபர் கொடுத்த *Telegram ID* மூலமாக வந்த ஒரு link-னுள் சென்ற பொழுது சிறிய Task-கள் செய்து கொடுத்து அதன் மூலம் சிறுதொகை முதலீடாக பெற்றார்.
இதனை உண்மை என நம்பியவர் மேலும் முதலீடு செய்து Task-யில் செல்வதற்காக பணம் 13 பரிவர்த்தனைகள் மூலம் ரூ.7,81,041/- செலுத்தி அதிக வருமானம் பெறலாம் என்று நம்பி பணம் செலுத்தியுள்ளார். பின்னர் தான் தவறான வழிகாட்டுதலில் சென்று மோசடி அடைந்ததை உணர்ந்து ராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. பத்ரிநாராயணன், இ.கா.ப.,* அவர்களின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் மூலம் முறையான நடவடிக்கை எடுத்து இதில் தொடர்புடையவர்களின் வங்கி கணக்குகளில் இருந்த *ரூ.1,15,93,033/-* முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும்
கோவை மாவட்ட *காவல் கண்காணிப்பாளர்* அவர்கள் பொதுமக்கள் ஆன்லைனில் குறைந்த பணத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என செய்திகளில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இணையதளம் மூலம் தொடர்பு கொள்ளும் அறிமுகம் இல்லாத நபர் கூறும் அறிவுரைகளை நம்ப வேண்டாம் என்றும், இணையதளம் மூலமாக உங்களது பணத்தை இழந்து விட்டால் *1930* என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்றும் சைபர் கிரைம் புகார்களுக்கு *www.cybercrime.gov.in* என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்* உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தியுள்ளார்.