சென்னை: சென்னை ஐஐடியில் படித்து வந்த ஆராய்ச்சி மாணவர் சச்சின்குமார் ஜெயின் என்பவர் வீட்டிலுள்ள கிச்சனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஐஐடி அலறல்
அதேசமயம், சாதி, மத ரீதியான ஒடுக்குமுறைகள் ஐஐடி வளாகங்களில் நடப்பதாக, அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன.. காரணம், முறையாக இங்கு இடஒதுக்கீடு பின்பற்றப்படாததால் இங்கு உயர்சாதியினர் ஆதிக்கம் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. மற்றொருபுறம், ஐஐடி வளாகங்களில் மாணவ, மாணவிகளின் தற்கொலை சம்பவங்களும், மர்ம மரணங்களும் நிகழ்ந்து வருகின்றன.. கடந்த 15 நாட்களுக்கு முன்புகூட ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.. சென்னை ஐஐடியில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீவன் சன்னி என்ற மாணவர் 2ம் ஆண்டு முதுநிலை ஆராய்ச்சி படிப்பு படித்து வந்துள்ளார்.

மன அழுத்தம்
அவர் சென்னை ஐஐடி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்… இவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாததால் மன அழுத்தம் காரணமாக கடந்த சில நாட்களாக சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்ரீவன் சன்னி, தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்டது.. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோட்டூரபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும்நிலையில், அதற்குள்ளாகவே இன்னொரு மாணவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்தான்.
கிச்சனில் தூக்கு
மேற்குவங்கத்தைச் சேர்ந்த மாணவர் சச்சின்குமார் ஜெயின்.. 31 வயதாகிறது.. ஐஐடியில் பி.எச்.டி படித்து வந்தார்.. வேளச்சேரி பிராமின் தெருவில், நண்பர்களுடன் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்து படித்து வந்துள்ளார்.. இந்நிலையில், நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுள்ளார்.. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை.. பாதியிலேயே கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டாராம்.. நேற்றிரவு, நண்பர்கள் வீட்டுக்கு வந்துபார்த்தபோது, கிச்சனில் உள்ள ஃபேனில் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருப்பதை பார்த்து பதறிப்போய் உள்ளனர்.. இதற்கு பிறகுதான் போலீசாருக்கு நண்பர்கள் தகவல் அளித்துள்ளனர்.
ஸ்டேட்டஸ்
மெசேஜ் தற்கொலை குறித்து தகவலறிந்த வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி, போஸ்ட் மார்ட்டத்துக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னுடைய தற்கொலைக்கு முன்பு, வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார் மாணவர்.. ‘நான் நலமாக இல்லை, என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று தன்னுடைய ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார். இந்த ஸ்டேட்டஸையே தன்னுடைய நண்பர்களுக்கும் மெசேஜ் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

Sorry
நேற்று காலையில் வழக்கம்போல் காலேஜ் சென்றவர், மதியம் வீடு திரும்பிவிட்ட நிலையில், 12 மணிக்கு, I am sorry not good enough’ என்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார்.. இதை 1 மணிக்கு பார்த்த நண்பர்கள், பதறியடித்து கொண்டு வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள்.. அப்போது, கிச்சன் பக்கத்திலுள்ள டைனிங் ரூமில் சடலமாக தொங்கி கொண்டிருப்பதை பார்த்துள்ளனர்..
இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை.. படிப்பில் ஏதாவது பிரச்சனையா? அல்லது வேறு பிரச்சனை இருக்குமா? என்பது குறித்த விசாரணையை போலீசார் கையில் எடுத்துள்ளனர்.
அடுத்தடுத்த தற்கொலைகள் நடந்து வருவதால், பெற்றோரைஅழைத்து கவுன்சிலிங் கொடுக்க நடவடிக்கை கொடுக்கப்படும் என்று இயக்குனர் காமக்கோடி சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.