Chennai G20 : காலநிலை மாற்றம், உணவு உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

சென்னையில் தொடங்கிய ஜி-20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாட்டில், உலக பொருளாதாரம், எரிசக்தி துறை மேம்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகின்றன.
நடப்பு 2023-ம் ஆண்டு ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ள நிலையில், வருகின்ற செப்டம்பர் 9 மற்றும் 10-தேதிகளில் டெல்லியில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் 200 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, சென்னையில் ஜி-20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு தொடங்கியுள்ளது.
இதில், அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட ஜி-20 நாடுகள் மற்றம் உறுப்பு நாடுகளை சேர்ந்த 80 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தின் போது காலநிலை மாற்றம், உணவு உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மேலும், உலக பொருளாதாரம், விலை வாசி உயர்வு உள்ளிட்டவை குறித்தும் விரிவாக விவாதிக்கப்படுகிறது.