
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் அண்ணன் K.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் வழிகாட்டுதலின்படி BSTU இணைப்பு , பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் S.ராதாகிருஷ்ணன் , பொதுச் செயலாளர் கொளத்தூர் J. ரவி மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 29.03.2023 அன்று மாலை பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட தலைவர் பாக்சர் G.திரு அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். தொழிலாளர்களின் நலனை குறித்தும், பல போராட்டங்களில் வெற்றி பெற்றதையும் விவரித்தார்கள்.
மேலும் அனைவருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்டத்தின் சார்பாக மாவட்டத் தலைவர் பாக்சர் திரு அவர்கள், மாவட்ட பொருளாளர் டாக்டர் K.ஜெகதீசன், மாவட்ட பொதுச் செயலாளர் J. அம்பேத்பாபு அவர்கள் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்