ரேஷன் கடைகளில் வருது மாற்றம்.. இனிமேல் எல்லா கடைகளிலும் இது இருக்க போகுதாம்.. தமிழ்நாடு அரசு வாவ்

சென்னை: நியாய விலை கடைகளில் அரசால் வழங்கப்படும் பொருட்களை மட்டுமே விநியோகிக்க வேண்டும் என கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.. அத்துடன் முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன..

ரேஷன் அட்டைகள்: அதேபோல, பொங்கல் பரிசு உள்ளிட்ட நிதியுதவிகளும் அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்படுகின்றன. மற்றொரு புறம், ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் போன்றவைகள் குறித்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஸ்பெஷல் கேம்ப்: அந்தவகையில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023 மார்ச் மாதத்துக்கான குறை தீர்ப்பு முகாம் எப்போது என்கிற அறிவிப்பையும் தமிழக அரசு செய்திருந்தது.. இந்த அறிவிப்பானது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது..காரணம், ரேஷன் கடைகளில் எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும். அங்கு வயதானவர்கள், மணிக்கணக்கில் காத்துக்கிடந்து ரேஷன் வாங்குவது சிரமமாக இருக்கும். அதற்காகவே, இந்த அங்கீகார சான்று தமிழக அரசு சார்பாக வழங்கப்படுகிறது..

அதேபோல, பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருந்தால் அதை ரேஷன் அட்டைதாரர்கள் இந்த முகாமில் தெரிவித்தால் குறைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

மகிழ்ச்சி செய்தி: இந்நிலையில், இன்னொரு மகிழ்ச்சி செய்தியை, கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.. நியாய விலை கடைகளில் அரசால் வழங்கப்படும் பொருட்களை மட்டுமே விநியோகிக்க வேண்டும் என ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.. மதுரை மாவட்டம் கோச்சடையில் செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன், ”அடுத்த ஒரு வருடத்துக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி ஏற்பாடு செய்ய மாதிரி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நியாய விலை கடைகளில் நியாய விலை பொருட்கள் மட்டும்தான் விற்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இலக்கோ அல்லது நியாய விலை அல்லாத பொருட்களையோ விநியோகிக்கக் கூடாது என்று சொல்லி இருக்கிறோம். மீண்டும் இதை உங்கள் முன்னால் தெளிவுபடுத்தி விடுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.. முன்னதாக, சிறுதானிய ஆண்டு விழாவை முன்னிட்டு, கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்களில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கூட்டுறவு கடன் சங்கங்களை, ‘ரூரல் மார்ட்’ ஆகவும் பல்முனை சேவை மையமாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளது முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *