
பஞ்சாபில் அரசு உதவித்தொகை வழங்காததால் 2 லட்சம் மாணவர்கள் கல்லூரி படிப்பை தொடர முடியவில்லை என்று தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற ஆம் ஆத்மி கட்சி முதல்வர் பகவந்த்சிங்மான் ஆட்சி நடைபெற்று வருகிறது இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு உதவித்தொகை திட்டத்தில் ரூ.2000 கோடி ஊழல் நடந்திருப்பதை விசாரிக்க உத்தரவிட்டார். இந்த நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் விஜயன் சம்பளம் நேற்று முன்தினம் செய்தியாளர் சந்திப்பில் கல்வி உதவித்தொகை திட்டத்தில் ஆண்டுக்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் மூன்று லட்சத்தில் இருந்து 1-1.25 லட்சமாக குறைந்தது உள்ளது அரசு தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ோ வழங்காததால் தங்கள் படிப்பை பாதியில் நிறுத்தியதாக பாதிக்கப்பட்ட 2 லட்சம் மாணவர்கள் கூறுகின்றனர். இதைத்தொடர்ந்து ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம். பஞ்சாப் மாநில அரசு கடந்த திங்கட்கிழமை அன்று ஆலோசனை நடத்தியது இதில் ஒன்றிய அரசு விடுவித்த உதவித்தொகை ரூ.2000 கோடியை மாநில கல்லூரிகளுக்கு செலுத்தாதது தெரிய வந்துள்ளது. இது குறித்து முதல்வர் பகவந்த்சிங்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் இது குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்று கூறினார். கல்லூரி மாணவர்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியவர்கள் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் என்று குறிப்பிடுகிறார்.
Itís difficult to find educated people about this topic, but you seem like you know what youíre talking about! Thanks