9 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்.. பூசாரியை கைது செய்து போலிஸ் விசாரனை.!

கேரள மாநிலம் இடுக்கி அருகேயுள்ள வல்லக்கடவு பகுதியில் பத்திரகாளி அம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயில் பூசாரியாக பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முலா பகுதியைச் சேர்ந்த விபின் (32) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று அந்த பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர், அந்த கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக தனியே வந்துள்ளார். அப்போது சிறுமியை கண்ட பூசாரி அவரை உள்ளே அழைத்துள்ளார். இவர் அழைத்ததையடுத்து உள்ளே நுழைந்த சிறுமியை ஒரு பூஜை அறைக்கு கூட்டிசென்றுள்ளார் பூசாரி. அங்கே அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து வீட்டிற்கு வந்த சிறுமி, பெற்றோரிடம் தனது உடல் வலிப்பதாக கூறி அழுதுள்ளார். மேலும் நடந்தவற்றையெல்லாம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ந்த பெற்றோர்கள் வண்டிப்பெரியாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பூசாரி விபினிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், தனது குற்றத்தை பூசாரி விபின் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவர் மீது போக்ஸோ வழக்குப்பதிந்து கைது செய்து பீருமேடு கிளைச் சிறையில் அடைத்தனர். கோயிலுக்கு சாமி கும்பிட வந்த 9 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் பூசாரி ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *