75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் சாலை வசதி இல்லாததால் பறிபோன குழந்தையின் உயிர் : தமிழ்நாட்டு மலை கிராமங்களில் அவலம்.!

வேலூர்: தமிழகத்தில் மாரி மாரி ஆட்சி செய்து வரும் திராவிட கட்சிகள் ஆண்ட பெரியார் மண்ணில் சாலை வசதி இல்லாத நிலையில் இளம் குழந்தை மரணம்…

வேலூர் மாவட்டம் அல்லேரி மலைப்பகுதிக்கு உட்பட்ட அத்திமரத்துக்கொல்லையைச் சேர்ந்த விஜி மற்றும் பிரியா ஆகிய பழங்குடியின தம்பதியினரின் ஒன்றரை வயது மகள்தான் தனுஷ்கா. கடந்த 26ஆம் தேதி, குழந்தையுடன் தங்களது வீட்டு வாசலில் அந்த தம்பதியினர் தூங்கியுள்ளனர். அப்போது, காட்டுப்பகுதியில் இருந்து வந்த விஷபாம்பு ஒன்று குழந்தையை கடித்துள்ளது.

துடிதுடித்து எழுந்த அழ துவங்கிய குழந்தையை பெற்றோர்கள் கவனித்தபோது, அருகே பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று என்னி அல்லேரி கிராமத்தில் இருந்து வலதிரம்பட்டு என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தால்தான் இந்த மலைப்பகுதி மக்களுக்கு தார் சாலை வசதியும், பேருந்து வசதியும் கிடைக்கும். அல்லேரியிலிருந்து வலதிரம்பட்டிற்கு 6 கி.மீ தூரம் இருக்கிறது. இந்த நிலையில் நண்பர் ஒருவரின் இருசக்கர வாகனம் ஒன்றை பெற்றுகொண்டு அவர்கள் மருத்துவமனைக்கு சென்று விடலாம் என்று நினைத்து குழந்தையை அழைத்து சென்றனர்.

ஆனால் வாகனம் பாதி வழியிலேயே நின்றுவிட, அந்த இரவு நேரத்தில் குழந்தையை தூக்கிகொண்டு வலதிரம்பட்டிற்கு அவர்கள் நடந்தே வந்து சேர்ந்தனர். அதன்பின், அணைகட்டு அரசு மருத்துவமனையில் இரவு 10 மணிக்கு தனுஷ்கா அனுமதிக்கப்படுகிறாள். ஆனால் அங்கு போதிய வசதி இல்லாததால் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு தனுஷ்காவை அனுப்பியுள்ளனர். அடுக்கம்பாறை மருத்துவமனையை சென்றடைந்தபோது இரவு மணி 2க்கு தனுஷ்கா இறந்துபோனதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து மறுநாள் சனிக்கிழமை காலை பிரேத பரிசோனைக்கு பிறகு தனுஷ்காவின் உடல் ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டது. தார் சாலை வசதி இருக்கும் தூரம் வரை மட்டுமே வந்த ஆம்புலன்ஸ், மேலும் வாகனம் செல்ல வழியில்லாததால் அவர்களை பாதியிலேயே இறக்கிவிட்டு சென்றனர் இந்த சம்பவம் இணைய தளம் வேகமாக பரவி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது மேலும் இந்திய நாட்டில் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகாலம் முடிந்ததும் இந்த நிலை நீடிக்கிறது என்றால் இந்த நாடு எப்படி ஓர் சுதந்திர நாடாக இருக்க முடியும்.?

இந்த நாட்டில் அரசியல் வாதிகளும் ஊழல் வாதிகளுக்கும் வாழ்வதற்கு சொகுசு விடுதிகள் பங்களாக்கள் என இருக்கும் போது அடித்தட்டு ஏழை எளிய மக்கள் இன்று அடிப்படை வசதி கூட இல்லாமல் இருப்பது எவ்வளவு பெரிய கோவளம் மத்திய அரசும் மாநில அரசும் ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் விளம்பர செய்து அற்ப அரசியல் செய்து வருவதாக சாமானிய மக்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *