7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை.!

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 3ம் தேதி, 6 மாநிலங்களில், 7 இடங்களில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது அந்தேரி கிழக்கு (மராட்டியம்), மோகாமா, கோபால்கஞ்ச் (பீகார்), ஆதம்பூர் (அரியானா), தாம்நகர் (ஒடிசா), கோலகோகர்நாத் (உத்தரபிரதேசம்) மற்றும் முனோகோடு (தெலுங்கானா) ஆகிய 7 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் தெலுங்கானா மாநிலம் முனோகோடு தொகுதியில அதிகபட்சம் 77 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. அந்தேரி கிழக்கில்தான் மிகக்குறைவாக 35 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டுக்கள் பதிவாகின. இந்த 7 தொகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *