
தமிழகத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட கிழக்கு கடற்கரை சாலை ஆறு வழிச் சாலையாக மாற்றப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப் பேரவையில் இன்று, 2022 – 23ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.அதில்,தமிழகத்தில் கிழக்கு கடற்கரை சாலை ரூ.135 கோடி செலவில் 6 வழிச் சாலையாக மாற்றப்படும்.முக்கியச் சாலையான சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம் சந்திப்பில், சந்திப்பில் ரூ.322 கோடியில் சுற்றமைப்புடன் கூடிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.சிங்கார சென்னை திட்டம் 2.0 திட்டத்துக்கு ரூ.500 கோடி,திறன் மிகு நகரங்கள் திட்டத்துக்கு ரூ.1,875 கோடி,நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு ரூ.8,737 கோடி,பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.3,700 கோடி ஒதுக்கப்படும்.தமிழகத்தில் புதிதாக 500 மின்சார பேருந்துகள் வாங்கப்படும்.மாணவர்களுக்கான பேருந்து பாஸ் திட்டத்துக்கு ரூ.928 கோடி ஒதுக்கப்படும்.