
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் 17வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் TTPL,SKM நிறுவனம் மற்று தொழிலாளர்களை வேலைக்கு வைத்து சுங்கச்சாவடியை காவல்துறை முழு பாதுகாப்புடன் நேற்று 16/10/22 முதல் இயக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் போராட்டம் நடத்தி வரும் தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது பற்றி சுங்கச்சாவடி ஊழியர்கள் முறையாக நீதி கிடைக்க வில்லை என்றும் அரசும் காவல்துறையும் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறது என்றும் குற்றச்சாட்டு வைத்தனர். இந்த நிலையில் சுங்கச்சாவடியில் ஊழியர்கள் ராமம் போட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் சுங்கச்சாவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.