
சென்னை: 137 நாட்களுக்கு பிறகு சென்னையில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின.சென்னையில் சுமார் நான்கரை மாதங்களுக்கு பிறகு பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 76 காசுகள் உயர்த்தியுள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 117 டாலர் ஏற்றத்தால் இந்த விலை உயர்வு ஏற்பட்டதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 76 காசுகள் உயர்ந்து ரூ 102.16 க்கு விற்பனையாகிறது. அது போல் சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை 76 காசுகள் உயர்ந்து ரூ 92.19க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் ரூ 50 உயர்ந்து ரூ 967.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.