
சென்னை: திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பிரபாகரன், கனிமொழி தம்பதியரின் மகள் ரிதன்யா. இவர் கும்மிடிப்பூண்டியில் கலைமகள் மெட்ரிக் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் ரிதன்யா, 42 வினாடிகளில் 35 ஆங்கில நா பிறழ் வாக்கியங்களை கூறி உலக சாதனை படைத்தார். இவரது சாதனை மூன்று உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இவரை பள்ளி தாளாளர் திருஞானம், முதல்வர் தேன்மொழி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி கௌரவித்தனர்.