
கீவ்:உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்க தொடங்கின.உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தலைநகர் கீவில் இணையதள சேவை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.கீவ் நகரின் குடியிருப்பு பகுதிகளை ரஷிய படைகள் நேற்று தாக்கின.

இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கீவ் நகரில் இருந்து வெளியேறினர். ஆயிரக்கணக்கானோர் மெட்ரோ ரெயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்தனர்.இந்நிலையில், இன்று காலை உக்ரைனின் மற்றொரு பெரிய நகரமான கார்கிவ்வுக்குள் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.உக்ரைனின் 976 ராணுவ மையங்களை தாக்கி அழித்துள்ளோம் என ரஷியா ராணுவம் தெரிவித்துள்ளது.