4 பழங்குடியின பெண்களை பாலியல் பலாத்கார செய்த வழக்கில்- விழுப்புரம் நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளர் சரண்.!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் தி.மண்டபம் கிராமத்தை சேர்ந்த 4 பழங்குடியின இருளர் இன பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அப்போதைய திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் சீனிவாசன், துணை ஆய்வாளர் ராமநாதன், தலைமை காவலர்கள் தனசேகரன், கார்த்திக்கேயன், பக்தவச்சலம் ஆகியோர் மீது புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் சீனிவாசனை தவிர மற்ற 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். ஆய்வாளர் சீனிவாசன் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அப்போது அவர் தனக்கு ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவினை விசாரித்த நீதிபதி இந்த வழக்கு விழுப்புரம் பகுதியை சேர்ந்ததால் அங்கு சரண் அடைந்து ஜாமீன் பெறலாம் என உத்தரவிட்டார். அதன்படி காவல் ஆய்வாளர் சீனிவாசன் இன்று விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *