
பதற்றமான போர் சூழலின் மத்தியில் உக்ரைன் தலைநகர் கிவ்வில் 35 மணி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஒருமாத காலமாக உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் ரஷியா தாக்குதல் நடத்தி வருவதை எதிர்த்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கிவ்வில் 35 மணி நேர ஊரடங்கை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சனிக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை காலை வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என கிவ் மேயர்விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.இந்த ஊரடங்கின்போதுகடைகள், மருந்தகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் பொது போக்குவரத்து இயங்காது என்றும் அவர் கூறினார்.