
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து காவல்துறையினரை தாக்கிய3 சம்பவங்கள் நடந்துள்ளது காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டும் நிலையில், அவற்றைத் தடுக்க சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறுகிறது காவல்துறை. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி,சென்னை திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பம்,மேலும் கள்ளக்குறிச்சி போன்ற மூன்று இடங்களில் போலீசாரையே பாஜகவினர் தாக்கிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் தமிழக முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதா என்று குற்றம் சாட்டி வருகின்றனர் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள்.