2021-22 நிதியாண்டில் எஸ்சி நலத் துறையால் மாணவர்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் 33 திட்டங்களில் 13 திட்டங்களுக்கு பணம் இல்லை என்று ஆர்டிஐ தகவல்.!

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ் கார்த்திக், பொதுத் தகவல் அலுவலரிடம் இருந்து பெற்றுப் பட்ட தகவலில் கடந்த ஐந்தாண்டுகளில் பயன்படுத்தப்படாத 927 கோடியை, வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கியதை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை திரும்ப அளித்துள்ளது. முதல்வர் தகுதி விருது, வெளிநாட்டில் உயர்கல்விக்கான உதவித்தொகை, ஆதி திராவிடர் நலப் பள்ளிகளுக்கு பரிசுகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டுதல், அபோரேட்டரி உபகரணங்கள் வாங்குதல், கிறிஸ்தவ எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு மிதிவண்டிகள் விநியோகம், மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சிகள் முறையாக தமிழக அரசு செயல்படுத்தவில்லை என்று தொனிக்கிறது. 2017-18 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசு தனது பங்கை வழங்கத் தொடங்கிய பிறகு, ஒரு சில உதவித்தொகை திட்டங்களில் நிதியின் ஒரு பகுதி சேமிக்கப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை துறையில் மொத்தம் 33 திட்டங்களின் 20 திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது எனவும் மீதம் உள்ள 13 திட்டத்திற்கு செயல்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *