
கள்ளக்குறிச்சி: விழுப்புரம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் கரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகளாகப் பக்தர்கள் பங்கேற்பின்றி உள் திருவிழாவாக நடந்த கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நாளை (ஏப்.6) பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெறுகிறது. அரவான் கூத்தாண்டவர் கூவாகம் சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வது வழக்கம்.

இத்திருவிழா கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் பங்கேற்பின்றி ஆகம விதிப்படி கோயிலுக்குள் நடந்தது. தற்போது கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் பங்கேற்புடன் சித்திரைத் திருவிழா நடைபெற உள்ளது. இதன்படி சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நாளை (ஏப்.6) நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி
