2 ஆண்டுகளுக்கு பிறகு செப்- 23-ம் தேதி கொரோனா காலகட்டத்தில் மூடப்பட்ட இந்தியா மற்றும் பூடான் எல்லை திறப்பு.!

புதுடெல்லி,இந்தியா மற்றும் பூடான் எல்லை கடந்த 2 வருடங்களாக கொரோனா பெரும் தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்தது.இந்த நுழைவு வாயில்களை தற்போது அரசாங்கம் திறப்பதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 23-ம் தேதி அசாம் மாநிலத்தில் உள்ள சம்ரப் ஜோங்கர் மற்றும் கெலேபு நுழைவு வாயில் திறக்கப்பட இருக்கிறது. இந்த நுழைவு வாயில்களை திறப்பதற்காக இருநாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தியது.இந்த பேச்சுவார்த்தை தற்போது சமூகமாக முடிவடைந்ததை அடுத்து நுழைவு வாயில்கள் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பூடான் அரசு வெளியிட்டுள்ளது. மேலும் வணிகம், வர்த்தகம், சுற்றுலா மற்றும் அதிகாரப்பூர்வ பயணங் களுக்காக கடந்த 2 வருடங்களாக மூடப்பட்டிருந்த நுழைவு வாயில்கள் திறப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *