
இது குறித்து கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் அளித்த பேட்டி:தமிழகத்தில் ‘ஓவர் லோடு’ ஏற்றுவதை நிறுத்துவதாக, அனைத்து மணல் லாரி உரிமையாளர்களும் முடிவு செய்தனர். ஆனால், தமிழகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அதிகாரிகள், லாரி உரிமையாளர்களை ஓவர் லோடு ஏற்றும்படி கட்டாயப்படுத்துகின்றனர்.இதற்காக, 50 ஆயிரம் ரூபாய் முதல் கட்டாய ‘மாமூல்’ வசூலிக்கின்றனர். ஓவர் லோடு ஏற்றி, விபத்தில் சிக்கிய 114 லாரிகள் இயங்காமல் உள்ளன. விபத்தில் சிக்கிய லாரி மற்றும் ஓட்டுனருக்கான இழப்பீடைத் தர காப்பீட்டு நிறுவனங்கள மறுத்துள்ளதால், அதை லாரி உரிமையாளர்கள் ஏற்க வேண்டியுள்ளது. இதனால், நாங்கள் ஓவர் லோடு ஏற்ற மறுக்கிறோம்.அதேபோல், தமிழகத்தில் உள்ள வாகனங்களுக்கு ஒளிரும் பட்டைகள் எனப்படும், ‘ரிப்ளெக்டிவ் ஸ்டிக்கர்’களை, அங்கீகரிக்கப்பட்ட 13 நிறுவனங்களிடம் இருந்து வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்டிக்கர்களுக்கு, ஐந்து ஆண்டு ஆயுள் காலம் உள்ளது. ஆனால், இரண்டு நிறுவனங்களின் ஸ்டிக்கர்களை மட்டுமே, ஒவ்வொரு ஆண்டும் கட்டாயமாக ஒட்டும்படி அதிகாரிகள் நெருக்கடி தருகின்றனர்.அதேபோல், தமிழகத்தில் எம் சாண்ட் மற்றும் ஆற்று மணலை, அங்கீகரிக்கப்படாத பல குவாரிகளில் இருந்து விற்கின்றனர். இதனால், அரசுக்கு இழப்பு ஏற்படுவதுடன் அனைத்து லாரி உரிமையாளர்களுக்கும் லோடு கிடைப்பதில்லை. இந்த முறைகேடுகளை தடுக்கும்படி, போக்குவரத்து கமிஷனரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.இதைக் கண்டித்து, வரும் 18ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். அதேநாளில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.என் தெரிவித்தார்.