
(விழுப்புரம்)கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த உலகப் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் ஆலய சித்திரை மாத திருவிழா கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வருடம் பங்குனி 22ம் தேதி 05/04/2022அன்று சாகை வார்த்தலுடன் தொடங்கி 18 நாள் திருவிழாவின் முக்கிய அம்சமான அரவான் கண் திறத்தல் , திருநங்கைகள் திருமணம் சித்திரை 6ம் தேதி 19/04/2022 அதனைத் தொடர்ந்து சித்திரை 7ம் தேதி 20/04/2022அன்று தேரோட்டம் நடைபெறுவதாகும் தகவல் வெளிவந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளாக உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா பரவல் காரணமாக பொதுமக்களின் நலன் கருதி நடைபெறாமல் இருந்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழாவில் உலகம் முழுவதும் இருந்து இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும் வருவார்களா இல்லையா.? என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும். திருவிழாவின் முக்கிய பங்களிக்கும் திருநங்கைகளும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதால் கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பகுஜன் குரல் செய்திக்காக கள்ளகுறிச்சி மாவட்ட செய்தியாளர் ப.சிவபெருமான்