
உத்தரப்பிரதேசம்: பிலிபித் என்ற மாவட்டத்தில், குன்வார்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த சிலர் பட்டியலின சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து அவரை தீ வைத்து எரிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்த 16 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 12 நாட்களுக்குப் பிறகு இன்று அவர் உயிரிழந்துள்ளார். செப்டம்பர் 7-ம் தேதி, பட்டியலின சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருந்தார். பின் அவர் உடலை முழுக்க டீசல் ஊற்றிய குற்றவாளிகள், அவர் உடலை எரிக்க முயன்றுள்ளனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனைக்கு அச்சிறுமியை அழைத்துச் சென்று போது, தனக்கு நேர்ந்த கொடுமையை வாக்குமூலமாக கொடுத்தார். இதுதொடர்பான வீடியோ ஒன்று வைரலானது. இந்த வீடியோ மூலம் அச்சிறுமிக்கு நேர்ந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் 12 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு அச்சிறுமி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் உடல் லக்னோவில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பிலிபிட்டில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற தலித் பழங்குடி மக்களின் மீது பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து பாஜக ஆலும் மாநிலத்தில் நடைபெற்றது வருவது சட்ட ஒழுங்கு மிகவும் மோசமான நிலையிலும் கேள்வி குறியாகவும் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.