15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு: பாஜக பிரமுகர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு.!

சென்னை: வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 22 பேரை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மோசமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தையின் மீது கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.13 வயது சிறுமியை கட்டயாப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ராஜலட்சுமி அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர்புகழேந்தி, மதன்குமார், சாயிதாபானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா என்கிற கஸ்தூரி, ராஜேந்திரன், காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தர், நாகராஜ், பொன்ராஜ்,வெங்கட்ராம் (எ)அஜய் கண்ணண் ஆகிய 21 நபர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தநீதிபதி, இவர்களுக்கான தண்டனை விவரத்தை செப்டம்பர் 19 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனநீதிபதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *