
1,330 திருக்குறள்களையும் மாமர இலைகளில் அதுவும் தொடர்ச்சியாக 20 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர்.திருச்சி தொட்டியம் அருகே உள்ள கோடியம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை அமுதா, 48.இவர் 30 மாமர இலைகளில் 1,330 திருக்குறள்களையும் 20 மணிநேரத்தில் எழுதி சாதனை படைத்துள்ளார். இதையடுத்து அவருக்கு பாண்டிச்சோரி ‘ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது.அமுதா பாண்டிச்சேரியில் இருந்து ‘கூகள் மீட்’ இணைய செயலி மூலம் நடத்தப்பட்ட உலக சாதனையாளர்கள் போட்டியில் பங்கெடுத்தார்.