1000அடி உயர்த்தில் பரந்த சரக்கு விமானம்; சில நிமிடங்களிலே அவசரமாக தரையிறங்கியதால் பரபரப்பு.!

புதுடெல்லி: டெல்லியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்க்கு இன்று ‘பெட்எக்ஸ்’ சரக்கு விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்டு சுமார் 1,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானம் மீது பறவைகள் மோதின. இதனால், அதிர்ச்சியடைந்த விமானி உடனடியாக விமானத்தை டெல்லி விமான நிலையத்தில் அவசர அவசமாக தரையிறக்கினார். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பறவை மோதியதால் விமானத்தின் இறக்கை, எஞ்சின் உள்ளிட்ட பகுதிகளில் ஏதேனும் பாதிப்பு அல்லது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பாதிப்பு எதுவும் இல்லை என்பது உறுதி செய்து பின்னர் விமானம் டெல்லியில் இருந்து மீண்டும் துபாய்க்கு புறப்பட்டு சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *