10-வழி சாலையா? அல்லது 6 வழிச்சாலையா? கட்டிமுடிக்கப்படாத சாலையை திறந்து வைத்த பிரதமர்; சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் மக்களை ஏமாற்றுகிறதா அரசு.?இணையத்தில் எழும் விமர்சனங்கள்.!

பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை இருந்து வருகிறார். அங்கு பெங்களூரு மற்றும் மைசூருவை இணைக்கும் 10-வழி விரைவுச்சாலை பணிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரதமர் திறந்துவைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், நாட்டை பாஜக முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்வதாகவும் கூறியிருந்தார். ஆனால், மோடி திறந்தவந்த அந்த திட்டம் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 2018ம் ஆண்டு கொண்டுவந்த திட்டம் என்பதும் அப்போதே அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் தொடங்கப்பட்டதும் தற்போது தெரியவந்துள்ளது. மேலும், அப்போது ரூ.6,420 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்ட சாலை தற்போது பாஜக ஆட்சியில் 10,000 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டதாகவும், இதில் ஊழல் நடந்துள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், 118 கிமீ தொலைவு கொண்ட இந்த சாலையில் 21 கிமீ அளவிற்கு பல்வேறு இடங்களில் பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தலுக்காக முடிக்கப்படாத சாலை திறக்கப்பட்டுள்ளதாகவும், இது பாஜகவின் தேர்தல் அரசியல் என்றும் எதிர் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், இது தொடர்பான புகைப்படமும் இணையத்தில் பரவி வருகிறது. முன்னதாக 10 வழி சாலை என்று கூறப்பட்டுள்ள நிலையில், அதில் வெறும் 6 வழி சாலையே இருக்கும் நிலையில் மீதம் உள்ள 4 வழி சாலை எங்கே என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். செய்திருந்ததும், 40% கமிஷனுக்கு பிறகு 10 வழி சாலை 6 வழி சாலையாக மாறிவிட்டது என்றும் விமர்சித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *