
ஹோலி பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் உள்ள மக்களால் ஹோலி பண்டிகை இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.மக்கள், ஒருவர் மீது ஒருவர்வண்ணப் பொடிகளைத் தூவிஅல்லது வண்ணம் கலந்த நீரை ஊற்றி கொண்டாடுகின்றனர்.உத்தரப்பிரதேசம், பஞ்சாப், பிகார், மேற்குவங்கம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் இது வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.ஹோலி பண்டிகையையொட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஹோலி பண்டிகையை முன்னிட்டு அனைத்து நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி, சமூக நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கான ஒரு வாழும் உதாரணம். வசந்த கால வருகை குறித்த நல்ல செய்தியைக் கொண்டுவருகிறது.ஹோலி திருவிழா, நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், புதிய ஆற்றலையும் ஏற்படுத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.