
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கிடங்கு ஒன்றில் நேரிட்ட தீ விபத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.ஹைதராபாத்தில் உள்ள போய்குடா பகுதியில் பழைய பொருள்கள் சேமித்து வைக்கும் கிடங்கு செயல்பட்டு வருகிறது. அதில் பணிகளை முடித்து முதல் தளத்தில் தொழிலாளர்கள் உறங்கிக்கொண்டிருந்தனர்.படிக்க |கரோனா 4-ஆவது அலை குறித்த ஆய்வுகள் தீவிரம்: மத்திய அரசுஅதிகாலை 4 மணியளவில் கீழ் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் முதல் தளத்திலிருந்து வெளியேற ஒரு வழிமட்டுமே இருந்ததால், ஊழியர்கள் வெளியேற முடியாமல் முதல் தளத்திலேயே சிக்கியதாக கூறப்படுகிறது.தீ வேகமாகப் பரவியதால், 8 வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்பட மொத்தம் 12 பேர் தீயில் சிக்கி உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.தகவல் அறிந்து 9 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள், தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.