
கர்நாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய மாநில அரசு விதித்த தடை தொடரும் என்ற அம்மாநில உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கி இருக்கின்றன.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு PU கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்லாமிய மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் ஒரு மாதத்துக்கும் மேலாக வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்டது இந்திய முழுவதுமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் நீதிமன்ற வழக்கை எதிர்த்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்த்தும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டனர்.