ஹிஜாப் அணிந்ததால் ரயிலில் உட்கார அனுமதி மறுப்பு: மும்பையில் நடந்த சம்பவத்துக்கு கண்டனம்.!

மும்பையில் ஹிஜாப் அணிந்து சென்றதால் தனது மனைவிக்கு ரயிலில் உட்கார அனுமதி மறுக்கப்பட்டதாக மருத்துவர் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.இது குறித்த அந்த செய்தியில், ”மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பர்வேஷ் மண்டிவாலா என்பவர் மருத்துவராக உள்ளார். இவரது மனைவி ஹிஜாப் அணிந்திருந்ததால் ரயிலில் அமர அனுமதி மறுக்கப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதற்கு மும்பை காவல் ஆணையர் சஞ்சய் பாண்டே ட்விட்டரில் அளித்த பதிலில், “ரயிலில் புடவை கட்டிய சில பெண்களை அமர அனுமதித்துள்ளனர். ஆனால், குழந்தையோடு இருந்தும் ஹிஜாப் அணிந்திருந்ததால், அமர இடம் தராதது முட்டாள்தனமானது என்று தெரிவித்துள்ளார்” என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவை, ஹோலி விடுமுறைக்கு பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *