ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மிகப்பெரிய ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” ராக்கெட் விண்வெளி நோக்கி சீறிப்பாய்ந்து. நடுவானில் வெடித்து சிதறியது; மீண்டும் சோதனை நடைபெறும்.!

மெக்ஸிகோசிட்டி: உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிறுவனம் ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” ராக்கெட்டை தயாரித்துள்ளது. ஸ்டார்ஷிப் ராக்கெட் 394-அடி (120-மீட்டர்) உயரத்துடன் 33 என்ஜின்களை கொண்டுள்ளது. இதன் மூலம் பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை விண்வெளிக்கு ஏப்.17-ம் தேதி செலுத்த திட்டமிடப்பட்டு பின் பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஏப்.20-ம் தேதி) திட்டமிட்டபடி விண்ணில் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன்படி தெற்கு டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள ஸ்பேஸ்எக்ஸிற்கு சொந்தமான ஏவதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

அப்போது விண்ணில் சீறிபாய்ந்த சென்ற நிலையில் நடுவானில் வெடித்து சிதறியது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இது குறித்து எலான் மஸ்க் கூறியது, இன்னும் ஓரிரு மாதங்களில் மீண்டும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *